கூரியர் மூலமாக போதைப் பொருள் கடத்தல்… மூவர் கைது!

செவ்வாய், 26 அக்டோபர் 2021 (11:01 IST)
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரியர் பார்சலில் போதைப் பொருள் கடத்தப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.

ஹாசிஸ் ஆயில் என்ற தடைசெய்யப்பட்ட போதைமருந்து 620 கிராம் கூரியர் மூலமாக அனுப்பப்பட்டது கண்டறியப்பட்டு அதை அனுப்பிய இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் கோவையைச் சேர்ந்த மற்றொருவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. பின்னர் அவரும் கைது செய்யப்பட்டு அவர் வீட்டில் தடைசெய்யப்பட்ட போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மூவரும் சேர்ந்து தமிழகம் முழுவதும் இதுபோல போதை மருந்துகளைக் கடத்தியது கண்டறியப்பட்டுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்