திருவொற்றியூர் பள்ளியில் மீண்டும் மாணவர்கள் வாந்தி, மயக்கம்! - பெற்றோர் வாக்குவாதம்!

Prasanth Karthick

திங்கள், 4 நவம்பர் 2024 (11:27 IST)

சென்னை திருவொற்றியூரில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு மீண்டும் வாந்தி, மயக்கம் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சென்னை திருவொற்றியூரில் செயல்பட்டு வரும் தனியார் உயர்நிலை பள்ளியில் 10 நாட்களுக்கு முன்பாக மாணவ, மாணவிகளுக்கு திடீர் வாந்தி, மயக்கம் மற்றும் உடல்நல குறைபாடுகள் ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சுமார் 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் விசாரணையில் வாயுக்கசிவால் மாணவர்கள் பாதிக்கப்பட்டதாக தெரிய வந்தது.

 

அதை தொடர்ந்து பள்ளிக்கு விடுப்பு வழங்கப்பட்டு வாயுக்கசிவு கோளாறை சரிசெய்யும் பணிகள் நடைபெற்றன. அதன்பின்னர் 10 நாட்கள் கழித்து இன்று பள்ளி மீண்டும் திறக்கப்பட்டது. ஆனால் இன்றும் பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு வாந்தி, மயக்க உள்ளிட்ட உடல்நல கோளாறுகள் ஏற்பட்டுள்ளது.

 

இதனால் பள்ளிக்கு விரைந்த பெற்றோர் தங்கள் குழந்தைகளை வீட்டிற்கு அழைத்து சென்று வரும் நிலையில், சிலர் பள்ளி நிர்வாகத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு எழுந்துள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்