மகாபலி சக்கரவர்த்தியின் வருகையை வரவேற்கும் விதமாக திருவோணம்

செவ்வாய், 29 ஆகஸ்ட் 2023 (20:26 IST)
கரூர் வேளாளர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மகாபலி சக்கரவர்த்தியின் வருகையை வரவேற்கும் விதமாக திருவோணம்  நட்சத்திரத்தில் கொண்டாடப்படும் திருவோணம் திருவிழா கொண்டாடப்பட்டது....
 
இவ்விழாவில் கல்லூரியின் தலைவர் திருமதி ராஜேஸ்வரி கதிர்வேல் அவர்கள் தலைமை வகித்தார் கல்லூரி அறக்கட்டளை உறுப்பினர் பிரீத்தி கவுதமன் அவர்கள் முன்னிலை வகித்தார் கல்லூரி முதல்வர் முனைவர் மு மனோ சாமுவேல் ஐயா அவர்கள் தொடங்கி வைத்தார்..... 
 
இவ்விழாவில் மாணவிகள் அனைவரும் கசவு என்னும்  வெள்ளை நிற புடவை அணிந்து.... அத்தப்பூ  கோலமிட்டு விழாவிற்கு அழகூட்டினர்..... பிறகு கல்லூரியில் போட்டிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள்  நடைபெற்றன... இதில் 1000 க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.... விழாவின் நிறைவாக மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது..

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்