சிறப்பு தரிசன டிக்கெட் ரத்து.. இனி ஒரே டிக்கெட்தான்! – திருத்தணி முருகன் கோவில் அறிவிப்பு!

செவ்வாய், 4 அக்டோபர் 2022 (09:52 IST)
திருத்தணி முருகன் கோவிலில் சிறப்பு தரிசனத்திற்காக மூன்று வகை சிறப்பு டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்ட நிலையில் அவற்றில் இரண்டு வகை ரத்து செய்யப்பட்டுள்ளது.

திருத்தணியில் உள்ள முருகன் கோவிலுக்கு நாள்தோறும் தமிழகம் முழுவதும் உள்ள பல மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்காக வருகை தருகின்றனர்.

பக்தர்கள் தரிசனம் செய்ய வசதியாக ரூ.25, ரூ.100 மற்றும் ரூ.150 ஆகிய விலைகளில் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் விநியோகிக்கப்பட்டு வந்தன. இதுதவிர இலவச தரிசனத்திற்கு தனி வரிசை உண்டு. இந்நிலையில் தற்போது இந்த மூன்று வகை சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் குறைக்கப்பட்டுள்ளது.

ALSO READ: ராஜராஜ சோழன் இந்து அரசனா? இயக்குனரிடம் கேளுங்கள்! – சரத்குமார் பளிச் பதில்!

இந்துசமய அறநிலையத்துறை முடிவின்படி, சிறப்பு தரிசனத்திற்கான ரூ.25 மற்றும் ரூ.150 டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சிறப்பு தரிசனத்திற்கு ரூ.100 டிக்கெட்டும், இலவச தரிசனமும் மட்டும் இனி செயல்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.

Edited by: Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்