தேர்தலுக்கு முன்னரே 20 தொகுதிகளில் வெற்றி: திருமாவளவன் அறிவிப்பு!

சனி, 6 மார்ச் 2021 (19:13 IST)
தேர்தலுக்கு முன்பே திமுக கூட்டணிக்கு 20 தொகுதிகளில் வெற்றி உறுதியாகி விட்ட தாக விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
வரும் சட்டமன்ற தேர்தலில் தொகுதி உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தைகளை அதிமுக மற்றும் திமுக தங்களது கூட்டணி கட்சிகளிடம் நடத்தி வருகிறது. அந்த வகையில் அதிமுக கூட்டணியில் இன்று 20 தொகுதிகள் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டது
 
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பாஜக போட்டியிடும் 20 தொகுதிகளிலும் திமுக கூட்டணீ வெற்றி உறுதி ஆகிவிட்டது என்றும் தேர்தலுக்கும் முன்பே திமுக கூட்டணிக்கு அதிமுக கூட்டணி 20 தொகுதிகளை கொடுத்துள்ளது என்றும் கூறினார்
 
மேலும் 6 தொகுதிகளை பெற்றுள்ள நாங்கள் விரைவில் வேட்பாளர் பட்டியலை அறிவிப்போம் என்றும் ஆறு தொகுதிகள் குறைவு என்றாலும் 6 தொகுதிகளிலும் வெற்றிபெற தீவிரமாக முயற்சிப்போம் என்று அவர் தெரிவித்துள்ளார்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்