ஆர்.எஸ்.எஸ்ஸே அவங்க ஆளுன்னு சொல்ற அளவுக்கு இருக்கார்! – சீமான் குறித்து திருமாவளவன்!

ஞாயிறு, 17 அக்டோபர் 2021 (14:58 IST)
சமீபத்தில் மதங்கள் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் பேசிய வீடியோ வைரலான நிலையில் அதுகுறித்து திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி ட்ரெண்டாகி வருகிறது. அதில் தமிழனின் ஆதி மதம் கிறிஸ்தவமோ, இஸ்லாமோ அல்ல. அவை வேறு தேச மதங்கள். தமிழனின் ஆதி மதம் சைவம் என்ற ரீதியில் பேசியிருந்தார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாக நிலையில் பலரும் மதப்பாகுபாட்டோடு சீமான் பேசுவதாக கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் “சீமான் தங்களுக்கானவர் என ஆர்எஸ்எஸ் காரர்கள் சொல்லும் அளவிற்கு சனாதான சக்திகளுக்கு துணை போகும் அரசியலை சீமான் நடத்தி வருகிறார். சமூக நீதி அரசியல் பேசும் மண்ணில் சனாதான சக்திகளுக்கு துணை போக வேண்டாம்” என கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்