திருக்குறளை தேசிய நூலாக்க கோரி கருத்தரங்கம்

சனி, 25 ஜூலை 2015 (22:57 IST)
திருக்குறளை தேசிய நூலாக்க கோரி மதுரையில் மாபெரும் கருத்தரங்கம் நடைபெற்றது.


 

மதுரையில் மணியம்மை பள்ளியில் திருக்குறளை தேசிய நூலாக்க்க கோரி கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த விழாவிற்கு கவிஞர் இரா .இரவி வரவேற்றார். புரட்சிக் கவிஞர் மன்றத்தின் தலைவர் வரதராசன் தலைமை வகித்தார்.
 
மருத்துவர் ஜெய. ராஜமூர்த்தி, ஏன் திருக்குறளை தேசிய நூலாக்க வேண்டும் என்பது குறித்து மிக விரிவாக எடுத்துரைத்தார். மேலும், திருக்குறளின் அருமை ,பெருமை அனைத்தையும் கூறினார்.
 
புரட்சிக் கவிஞர் பாரதி தாசன் கவிதை வரிகளையும், சிலப்பதிகார வரிகளையும் , வள்ளலாரின் பாடல்களையும் எடுத்துரைத்தார். இதனை பாராட்டும் வகையில், பார்வையாளர்கள் அனைவரும் எழுந்து நின்று கரவொலி செய்தனர்.
 
திருக்குறளை தேசிய நூலாக்குக என்ற தலைப்பில் சிறப்புரையாற்றிய மருத்துவர் ஜெய.ராஜமூர்த்திக்கு புரட்சிக் கவிஞர் மன்றத்தின் தலைவர் பி.வரதராசன் தமிழ் அறிஞர் இரா இளங்குமரனார் எழுதிய நூல்களை வழங்கினார்.  விழா முடிவில் கவிக்குயில் இரா .கணேசன் நன்றி கூறினார். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்