திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறையை திறக்க முடியாததால் வாக்கு எண்ணிக்கை தாமதமாகி வருவதாகவும், செய்யாறு தபால் வாக்கு பெட்டியின் சாவி இல்லாததால் வாக்கு எண்ணிக்கை தாமதமாகி வருவதாகவும், புதுக்கோட்டையில் தேர்தல் அலுவலர்கள் பணி ஒதுக்கீட்டில் குளறுபடி இருப்பதாகவும், மதுரையில் தேர்தல் அலுவலர்கள், முகவர்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு வர தாமதம் ஆனதால் வாக்கு எண்ணிக்கை தாமதமாகி வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது
அதேபோல் பழனியில் முகவர்கள் வராததால், வாக்கு பெட்டி வைக்கப்பட்டுள்ள அறை முன்பு அதிகாரிகள் காத்திருப்பதாகவும், திண்டுக்கல்லில் தபால் வாக்கு எண்ணிக்கையில் குழப்பம் ஏற்பட்டுள்ளதை அடுத்து அதிகாரிகளிடம் திமுகவினர் முறையீடு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது