நிலம் சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் போலீஸ் பாதுகாப்புடன் வருவாய்த்துறையினர் நிலத்தை அளவீடு செய்ய வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ...

J.Durai

வியாழன், 23 மே 2024 (15:02 IST)
சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியம் தாதாபுரம் ஊராட்சியில் பழனிசாமி குடும்பத்திற்கும் அவரது உறவினரான நாமக்கல் மாவட்டத்தில் ஏடிஎஸ்பியாக பணிபுரியும் கனகேஸ்வரிக்கும் இடையே வழித்தட பிரச்சனைகள் சம்பந்தமாக எடப்பாடி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு வழக்கு நிலுவையில் உள்ள இந்நிலையில் எடப்பாடி வட்டாட்சியர் உத்தரவின் பேரில் ஏடிஎஸ்பி கனகேஸ்வரிக்கு ஆதரவாக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சம்பந்தப்பட்ட நிலத்தை அளவீடு செய்ய வருவாய்த் துறையினர் வருகை புரிந்தபோது எதிர்தரப்பினரான பழனிசாமியின் மனைவி அமுதா தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு நிலத்தை அளவீடு செய்தால் தீக்குளிப்பதாக எச்சரிக்கை விடுத்து எதிர்ப்பு தெரிவித்து ஆரவாரத்தில் ஈடுபட்டார்.
 
உடனடியாக பெண் போலீசார் ஒருவர் அந்த பெண்ணின் மீது தண்ணீர் ஊற்றி தடுத்தனர். அதன் பின்னர் நிலத்தை அளவீடு செய்யும் பணி நிறுத்தப்பட்டது...
 
நிலம் சம்மந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள போது வருவாய்த்துறையினர் சம்மந்தப்பட்ட நிலத்தை அளவீடு செய்ய வந்ததால் எதிர்ப்பு தெரிவித்த பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்ற இச்சம்பவம் தாதாபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்