போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்

Sinoj

புதன், 10 ஜனவரி 2024 (15:45 IST)
தமிழகம் முழுவதும்  போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.
 
திமுக ஆட்சி நடந்து வரும் நிலையில், பழைய ஓய்வூதிய திட்டம்,  15வது ஊதிய ஒப்பந்ததை இறுதி செய்வது உள்ளிட்ட தொழிலாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக  சமீபத்தில் தமிழக அரசுடன்  நடைபெற்ற  முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
 
எனவே திட்டமிட்டபடி கடந்த  ஜனவரி 9 ஆம் தேதி முதல்  வேலை நிறுத்தம் நடைபெறும் என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்து, அதன்படி போராட்டம் தீவிரமடைந்துள்ளன.
 
இதுகுறித்து அமைச்சர் சிவசங்கர், போக்குவரத்து தொழிலாளர்கள் விவகாரத்தில் உயர் நீதிமன்ற தீர்ப்பை பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தொழிற்சங்கத்தினர் தொடர் பிடிவாதத்தில் இருக்கிறார்கள் என்று தெரிவித்திருந்தார்.
 
இந்த நிலையில், ''போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் இந்தப் பண்டிகை காலத்தில் தேவையா..?  பொங்கல் பண்டிகையொட்டி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் போராட்டத்தை ஒத்திவைக்க வேண்டும்'' என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
 
இந்த நிலையில், வேலை நிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.
 
பொங்கல் பண்டிகையொட்டி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் போராட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என உயர்  நீதிமன்ற நீதிபதிகள் கூறியிருந்த நிலையில், இதற்கு சம்மதம் தெரிவித்து,  போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் வரும் ஜனவரி 19 ஆம் தேதி வரை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்