திருவாரூரில் உலகப் புகழ்பெற்ற ஆழித் தேரோட்டம்... இன்று ஒரே நாளில் 5 தேரோட்டங்கள்.!

சனி, 1 ஏப்ரல் 2023 (17:04 IST)
திருவாரூரில் உலகப் புகழ்பெற்ற ஆழித் தேரோட்டம் நடைபெற்று வரும் நிலையில் இன்று ஒரே நாளில் 5 தேரோட்டங்கள் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
திருவாரூர் ஒவ்வொரு ஆண்டும் ஆழி தேரோட்டம் நடைபெறும் என்பதும் உலகப் புகழ்பெற்ற இந்த போராட்டம் இன்று நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன், மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ, காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் ஆகியோர் தேரை வடம் பிடித்து தேர்த் திருவிழாவை தொடங்கி வைத்தார்கள்.
 
 மேலும் நூற்றுக்குணக்கான பக்தர்களும் கலந்து கொண்டு இந்த தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். விநாயகர், முருகன், தியாகராஜர், அம்பாள், சண்டிகேஸ்வரர் ஆகிய ஐந்து கடவுள்கள் இருக்கும் தேரோட்டங்கள் என்று ஒரே நாளில் நடைபெறுகிறது. இந்த தேரோட்டத்தை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து உள்ளதை அடுத்து 1500 மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்