ஜெயலலிதாவின் புகைப்படம் தமிழகத்தை ஆள்கிறது: புதிய சர்ச்சை!

புதன், 26 அக்டோபர் 2016 (08:50 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் ஒரு மாதத்திற்கும் மேலாக சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அவர் வகித்து வந்த பொறுப்புக்கள் நிதியமைச்சர் பன்னீர் செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்டு ஜெயலலிதா இலாகா இல்லாத முதல்வராக தொடர்கிறார்.


 
 
அமைச்சரவை கூட்டங்களுக்கும் ஓ.பன்னீர்செல்வம் தலைமை வகிப்பார் எனவும் கூறப்பட்டது. இதனையடுத்து ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தமிழக அமைச்சரவை இரண்டு முறை கூடியது. இந்த கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படம் பிரதானப்படுத்தப்பட்டது.


 
 
முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படம் நன்றாக தெரியும் படி வைக்கப்பட்டு எடுக்கப்பட்ட புகைப்படங்களே கூட்டத்திற்கு பின்னர் தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டது.
 
இந்நிலையில் ஒரு புகைப்பாடம் இந்திய மாநிலத்தை ஆட்சி செய்கிறது என பிபிசி உலக செய்தியில் செய்தி வெளியாகி சர்ச்சையை உருவாக்கி உள்ளது. இதற்கு முன்னர் கேரள இணையதளம் ஒன்று இந்த புகைப்படம் குறித்து நக்கலாக செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்