இதனால் கடும் கொந்தளிப்பில் இருந்த பொதுமக்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆலையை மூட வலியுறுத்தியும் பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், மாணவ அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் இன்று 52-வது நாளாக தொடருகிறது.
இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலை மற்றும் அதில் பணியாற்றும் ஊழியர்களுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க கோரி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.