அப்போது பின்புறமாக கைகள் கட்டப்பட்ட நிலையில் சடலம் தனியாகவும், தலை தனியாகவும் இருந்துள்ளது. போலீசாரின் விசாரணையில் இரு சக்கர வாகனம் ஒன்றில் 4 பேர் வந்ததாகவும் அதில் இருந்த சுமார் 25 வயது நிரம்பிய இளைஞரின் கைகள் பின்புறம் கட்டப்பட்ட நிலையில், அவரை இரு சக்கர வாகனத்தில் இருந்து கீழே இறக்கி
அரிவாளால் வெட்டியதில் தலை தனியாக விழுந்ததாகவும் உடல் தனியாகவும் விழுந்ததாகவும், அந்த இளைஞரின் தலையை காலால் எட்டி உதைத்து சாலையில் தள்ளி விட்டு 3 பேர் இரு சக்கர வானத்தில் தப்பி சென்றதாகவும் காவல் துறை விசாரணையில் தெரிய வந்தது.
இவர் மீது கொலை, கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதனை தொடர்ந்து தலை தனியே துண்டித்து கொலை செய்யப்பட்ட ரவுடியின் சடலத்தை கைப்பற்றிய பொன்னேரி காவல் துறையினர் உடற்கூறு ஆய்வுக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடந்த 2021ஆம் ஆண்டு இருசக்கர வாகனத்தில் ராகேஷ் பெட்ரோல் திருடிய போது தட்டிக்கேட்ட வாகன உரிமையாளரை வெட்டி கொலை செய்திருந்தார்.