சைதாப்பேட்டை சுரங்கப்பாதையில் சிக்கிய அரசுப்பேருந்து: பெரும் பரபரப்பு

வெள்ளி, 12 நவம்பர் 2021 (07:04 IST)
சைதாப்பேட்டை சுரங்கப்பாதையில் சிக்கிய அரசுப்பேருந்து: பெரும் பரபரப்பு
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள சுரங்கப்பாதை ஒன்றில் அரசு பேருந்து ஒன்று சிக்கியதால் பயணிகள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக தீயணைப்பு படையினர் வந்து பயணிகளை மீட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அரங்கநாதன் சுரங்கப்பாதையில் கடந்த சில நாட்களாக போக்குவரத்து அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் அரசு பேருந்து டிரைவர் ஒருவர் அந்த வழியாக பேருந்தை இயக்கினார் 
 
இந்த நிலையில் திடீரென பேருந்து சுரங்கப் பாதையின் நடுவில் சிக்கிக் கொண்டது இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் உடனடியாக விரைந்து பயணிகளை காப்பாற்றினார்கள்
 
அதன்பின்னர் சங்கிலிகள் கட்டி பேருந்து இழுக்கப்பட்டதாகவும் பேருந்து தற்போது காப்பாற்றப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் தடை செய்யப்பட்ட பகுதிகளில் வாகனங்கள் செல்ல வேண்டாம் என போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தியுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்