அடக்குமுறையால் திமுக ஆட்சிக்கு அழிவும் ஆரம்பித்துவிட்டது- அதிமுக

புதன், 19 அக்டோபர் 2022 (16:46 IST)
சட்டப்பேரவையில் அதிமுக எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை ஓ.பன்னீர் செல்வத்திற்கு   ஒதுக்கப்பட்ட நிலையில், சபா நாயகரின் இந்த நடவடிக்கைக்கு எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அதிமுக எம்.எல்.ஏக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவினர் இன்று போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்த நிலையில், இந்த போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்தது.

ALSO READ: எடப்பாடி பழனிசாமி அதிரடி கைது: அதிர்ச்சியில் அதிமுக தொண்டர்கள்!
 
இந்த நிலையில் தடையை மீறி முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், முன்னாள் எம்பி கேபி முனுசாமி உள்ளிட்டோர் போராட்டம் நடத்தினர்

இதனையடுத்து அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் போராட்டம் நடத்தியதாக எடப்பாடி பழனிச்சாமி, ஜெயக்குமார், கேபி முனுசாமி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்

இந்தக் கைது நடவடிக்கையை கண்டித்து வள்ளுவர் கோட்டத்தில் அதிமுகவின் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் அதிமுகவின் டுவிட்டர் பக்கத்தில்

,’’ மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அமைதியான முறையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தக்கூட அனுமதி மறுப்பது ஜனநாயக விரோதத்தின் உச்சம். அண்ணா திமுக எனும் ஆலமரத்தை உங்கள் அடக்குமுறைகளால் அடக்க நினைப்பது அறிவீனம் மட்டுமல்ல திமுக ஆட்சிக்கு அழிவும் ஆரம்பித்துவிட்டது’’ எனத் தெரிவித்துள்ளது.

Edited by Sinoj

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்