தேர்தல் தேதியே அறிவிக்கல.. ஆனா வேட்பாளர் பட்டியல் ரெடி? – செம ஸ்பீடில் செல்லும் தமிழக பாஜக!

Prasanth Karthick

திங்கள், 5 பிப்ரவரி 2024 (12:48 IST)
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக பாஜக தேர்தல் பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.



கடந்த 10 ஆண்டு காலமாக மத்தியில் பாஜக ஆட்சியில் இருந்தாலும் தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக, அதிமுக கட்சிகளே கடந்த இரண்டு நாடாளுமன்ற தேர்தல்களிலும் பெரும்பான்மை வகித்துள்ளன. இந்நிலையில் இந்த முறை நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி முறிந்துள்ள நிலையில் பாஜக தனித்து களம் இறங்குகிறது.

குறைந்தது 7 பாஜக எம்.பிக்களையாவது தமிழகத்திலிருந்து நாடாளுமன்றம் அனுப்ப வேண்டும் என தமிழக பாஜக தீவிரமான தேர்தல் பணிகளில் இறங்கியுள்ளது. மற்ற கட்சிகளுடனான கூட்டணி பேச்சுவார்த்தை, வேட்பாளர் தேர்வு என தீவிரம் காட்டி வரும் பாஜக, ஏற்கனவே தமிழகத்தில் தாங்கள் வெல்ல சாத்தியம் உள்ள தொகுதிகளையும், அதற்கான ஸ்டார் வேட்பாளர்கள் பட்டியலையும் தயாரித்துவிட்டதாக கூறப்படுகிறது.

ALSO READ: அமைச்சராக ரூட்டு போடும் தமிழிசை? கேட் போடும் ரங்கசாமி? – புதுச்சேரியில் புது திருப்பம்?

நேற்று பாஜக கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றபோது அதில் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள பி.எல்.சந்தோஷ் பேசியபோது ”மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்னரே தமிழ்நாட்டில் பாஜக சார்பில் முக்கிய நிர்வாகிகள் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்” என்றும் நம்பிக்கையோடு தெரிவித்துள்ளார்.

விரைவில் தமிழகம் வரும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுடன் கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கான தொகுதி ஒதுக்கீடு குறித்தும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்