இன்று எல்லோருக்கும் எல்லா செயல்களுமே உடனே ஆக வேண்டும் என்று நினைக்கிறார்கள். சில நிமிடம் கூட தாமதாகக் கூடாது என்று நினைக்கிறார்கள்.அதிலும் பணப் பரிமாற்றங்களுக்கு தனியார் பரிவர்த்தனை செயலிகளும் பயன்பாட்டுக்கு வந்துள்ளதால்.கூகுள் பே GOOGLE PAY, போன் பே (phone pay ) பேடி எம் (paytm) ஆகியவற்றைப் பயன்படுத்துகிறார்கள்.
சென்னை காவல் ஆணையர் அலுவலத்தில் உள்ள வக்கி மோசடி தடுப்பு பிரிவில் தினமும் 10 புகார்களாவது வருகின்றன. இது போன்று கூகுளில் பதிவாகியுள்ள போலி சேவை எண்களை நீக்குவதற்கு அனுமதியை காவல் துறையினருக்கு வழங்கப்படாததால் போலி எண்கள் நீக்கப்படாமல் உள்ளன, இதன் காரணத்தால் வாடிக்கையாளர்கள் உண்மையான சேவை மையம் என்று கருது இது போன்ற போலி சேவைகளில் சிக்கி ஏமாறுகிறார்கள் என்று தெரிவித்தார்.