பகலில் சமையல்காரன், இரவில் கொள்ளைக்காரன் - வேற லெவல் திருடன்

சனி, 18 மே 2019 (11:48 IST)
பகலில் சமையல்காரனாக வேலை செய்துவிட்டு, இரவில் கடைகளை உடைத்து கொள்ளையடிக்கும் மர்ம கொள்ளைக்காரனை போலீஸார் கைது செய்தனர்.
 
சென்னையில் உள்ள அண்ணாநகர் சுற்றுவட்டார பகுதிகளில் அடிக்கடி கடைகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு திருடப்படும் சம்பவம் அடிக்கடி நடந்து வந்தது. கொள்ளைக்கான காரணங்கள் பிடிபடாத நிலையில் கொள்ளையனை பிடிக்க மாவட்ட துணை ஆணையர் சுதாகர் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. 
 
தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட தனிப்படை போலீஸார், தேடுதலின் ஒரு பகுதியாக மெட்ரோ ரயில் நிலைய கண்காணிப்பு கேமராக்களை சோதித்தபோது அதில் சந்தேகத்திற்குரிய மர்ம ஆசாமி ஒருவரின் நடமாட்டத்தை கண்டுபிடித்தனர்.
 
அந்த ஆசாமியை கைது செய்து விசாரித்தபோது, அவர் அரியலூரை சேர்ந்த சிவா என்பது தெரிய வந்தது. வாய்பேச முடியாத இவர் காலை வேளைகளில் சமையல்காரனாக பணிபுரிந்து விட்டு, ஆடம்பர செலவுகளுக்காக இரவில் திருடுவதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இந்த சம்பவம் அண்ணாநகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்