இட்லி சாப்பிட மறுத்த குழந்தை…. ஆத்திரத்தில் அடித்துக் கொன்ற பெரியம்மா

வியாழன், 10 செப்டம்பர் 2020 (08:06 IST)
கள்ளக்குறிச்சி மாவட்டம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வந்தவர் ரோசாரியோ. இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்தத் தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை இருந்துள்ளது.

எனவே குழந்தையை வளர்ப்பதற்க்கா வேண்டி, அவர் இன்னொரு திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் குழந்தையை, இறந்த மனைவியின் அக்கா ( பெரியம்மா)வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன் தினம் அக்குழந்தைக்கு சாப்பிட்ட இட்லி கொடுத்துள்ளார்.

குழந்தை சாப்பிடாமல் அடம் பிடித்துள்ளதாகத் தெரிகிறது. இதில் ஆத்திரம் அடைந்த பெரியம்மா அடித்து பலமாகக் தாக்கியதாகத் தெரிகிறது.

இதில் பலத்த காயம் அடைந்த குழந்தை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் அப்பெண்ணைக் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்