நாடு முழுவதும் பலவகை உணவுகள் ட்ரெண்டிங் ஆகும் நிலையில் சில வகை உணவுகள் உயிருக்கு ஆபத்தாகவும் அமைந்துவிடும் சம்பவங்களும் நடக்கின்றன. சமீபத்தில் நாடு முழுவதும் பல பகுதிகளில் சவர்மா சாப்பிட்டு குழந்தைகள் பலியான சம்பவத்தை தொடர்ந்து சவர்மா கடைகளில் தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. அதுபோல பஞ்சு மிட்டாயில் ரோஸ் நிறத்திற்காக சேர்க்கப்படும் ரசாயனத்தால் புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக ரசாயனம் சேர்ப்பது தடை செய்யப்பட்டது. அந்த வகையில் சிறுவர்களிடையே பிரபலமாக உள்ள ஸ்மோக் பிஸ்கெட்டும் சர்ச்சைக்குள்ளாகி வருகிறது.
திரவ நைட்ரஜனில் முக்கி எடுத்து வாயில் போடப்படும் பிஸ்கட்டுகளில் இருந்து எழும் புகையை கண்டு சிறுவர்கள் பலரும் அந்த பிஸ்கட்டுகளை சுவைக்க விரும்புகின்றனர். சமீபமாக திருவிழாக்கடைகள், கண்காட்சிகளிலும் இந்த ஸ்மோக் பிஸ்கட் ஸ்டால்களை காண முடிகிறது.