விஜயகாந்த் மறைவு: நாளை அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து - ஆர்.கே.செல்வமணி அறிவிப்பு

வியாழன், 28 டிசம்பர் 2023 (13:19 IST)
தமிழ் சினிமாவின் பிரபல  நடிகரும், தேமுதிக  நிறுவனருமான விஜயகாந்த் இன்று உடல் நலக்குறைவால் காலமானார்.

அவரது மறைவுக்கு சினிமாத்துறையினர், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் கூறி வருகின்றனர்..

 
திமுக எம்பி கனிமொழி  நடிகர் விஜயகாந்த் மறைவையொட்டி தெரிவித்துள்ளதாவது: 

''தே.மு.தி.க நிறுவனர் திரு. விஜயகாந்த் அவர்கள் மறைவெய்திய செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. 
 
எளிமை குறையாத மனிதராக, மக்கள் நலனுக்காகப் பொதுவாழ்வில் துணிச்சலாகச் செயலாற்றியவர். தலைவர் கலைஞரிடமும் எனது அம்மாவிடமும் அன்பு பாராட்டி,  எங்களின் நலன் விரும்பியாக இருந்த அவரது மறைவு தமிழ்நாட்டு அரசியலுக்கு மட்டுமன்றி எனக்கும் பேரிழப்பாகும்.  
 
அவரது குடும்பத்தினர் மற்றும் கட்சியினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்''என்று தெரிவித்துள்ளார்.
 
இந்த நிலையில்’’  மனித குலத்திற்கு ஓர் பேரிழப்பு என்று நடிகர் விஜயகுமாரின் மகனும், நடிகருமான அருண்விஜய் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:

‘’மனித குலத்திற்கு ஓர் பேரிழப்பு தன்னலத்தை பின் நிறுத்தி, மக்களுக்காகவே உழைத்த ஓர் உத்தமமான உள்ளம், நம் கேப்டன். நமது சினிமா துறையில், நான் கண்டு வியந்து பெருமதிப்பு வைத்திருந்த ஒருவர். இவரது இழப்பினை ஏற்றுக்கொள்ளக்கூடிய மனதிடத்தை அவரது குடும்பத்தாருக்கும், ரசிகர்கள் மற்றும் தொண்டர்களுக்கும் ஆண்டவன் வழங்க வேண்டும். ஓம் சாந்தி’’என்று தெரிவித்துள்ளார்.

மேலும்,பெப்சி தலைவரும் இயக்குனருமான ஆர்.கே.செல்வமணி, ''நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த்  மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக  நாளை(29 ஆம் தேதி) அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படுவதாக'' அறிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்