மேலும் குளத்து சரல் மண் டிராக்டர்களில் அதிக வேகத்தில் மக்கள் வசிக்கும் தெருக்களின் வழியாக கொண்டு செல்லப்படுகிறது. அவ்வாறு கீழ சுரண்டை பிள்ளையார் கோவில் தெருவில் அதிவேகமாகச் சென்ற டிராக்டர் வாகனம் தனது வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த கீழ சுரண்டை தங்கராஜ் அவர்களின் பேரனும் ராஜதுரை அவர்களின் மகனுமாகிய நான்கு வயது சிறுவன் ராஜ முகன் என்பவரின் மீது டிராக்டரின் முன்பக்க டயர் மற்றும் இஞ்சின் டயர் டைலர் டயர் ஏறி இறங்கியதில் சிறுவன் ராஜ முகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.
சம்பவம் பற்றி புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் ஐயா அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, டாக்டர் ஐயா அவர்களின் ஆணைக்கிணங்க தென்காசி மாவட்ட துணை செயலாளர் ஆர் கே கிருஷ்ண பாண்டியன் சுரண்டை நகர செயலாளர் திருமலை குமார் சுரண்டை 25வது வார்டு நகராட்சி புதிய தமிழகம் கவுன்சிலர் வினோத் குமார் சிறுவன் ராஜ முகனின் தாத்தா தங்கராஜ் மற்றும் நிர்வாகிகள் சுரண்டை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு புகார் மனு அளித்தனர்.