பாடம் நடத்த வேண்டுமா? கொதிக்கும் ஆசிரியர்கள்

வெள்ளி, 11 நவம்பர் 2016 (17:10 IST)
ஆசிரியர்கள் இனி நின்று கொண்டுதான் பாடம் நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இதற்கு ஆசிரியர் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


 

 
ஆசிரியர்கள் வகுப்பறைக்குள் செல்போன் பயன்படுத்த கூடாது என்று அறிவிப்புக்கு பின் தற்போது ஆசிரியர்கள் நின்று கொண்டுதான் பாடம் நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
 
இதுகுறித்து வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது:-
 
வகுப்பு நேரங்களில் ஆசிரியர்கள் அமர்ந்து பாடம் நடத்த கூடாது. உட்கார வேண்டிய தேவை இல்லாததால் வகுப்பறைகளில் ஆசிரியர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நாற்காலிகளை அகற்ற வேண்டும்.
 
இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆசிரியர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 
 
உடல் நலப்பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டோர், மாதவிடாய் காலங்களில் இருக்கும் ஆசிரியர்கள் என பலரும் இதனால் பதிக்கப்படுவார்கள். ஒரு பாடவேளை என்பது 45 நிமிடங்கள், ஒருநாளை எவ்வலவு நேரம் நிற்க வேண்டும் நிலை ஏற்படும். இது மனிதநேயமற்ற செயல் என ஆசிரியர்கள் என வேதனை தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்