டீக்கடைக்காரருக்கு எம்.எல்.ஏ சீட் கொடுத்த பாஜக: இமாச்சல பிரதேசத்தில் ஆச்சரியம்!

ஞாயிறு, 23 அக்டோபர் 2022 (18:25 IST)
டீக்கடைக்காரருக்கு எம்.எல்.ஏ சீட் கொடுத்த பாஜக: இமாச்சல பிரதேசத்தில் ஆச்சரியம்!
எம்எல்ஏ சீட்டு வாங்க வேண்டும் என்றால் லட்சக்கணக்கில் செலவு செய்ய வேண்டும் என்றும் அதேபோல் போட்டியிடுவதற்கு கோடிக்கணக்கில் செலவு செய்ய வேண்டும் என்பதே இந்திய அரசியல்வாதிகளின் நிலையாக உள்ளது
 
ஆனால் இமாச்சல பிரதேசத்தில் டீக்கடை நடத்திவரும் 57 வயது ஏழை ஒருவருக்கு பாஜக சார்பில் போட்டியிட சீட் கிடைத்துள்ளது 
 
இமாச்சல பிரதேசத்தில் உள்ள சிம்லா தொகுதியில் நான்கு முறை எம்எல்ஏவாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் சுரேஷ் பரத்வாஜ். ஆனால் இவருக்கு பதிலாக அந்த பகுதியில் உள்ள டீ கடைக்காரர் சஞ்சய் என்பவருக்கு பாஜக தலைமை சீட் கொடுத்துள்ளது
 
நேற்று அவர் வேட்பு மனு தாக்கல் செய்தார். இதுகுறித்து டீக்கடைக்காரர் சஞ்சய் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது தேர்தலில் ஒரு தொழிலாளி கூட போட்டியிட முடியும் என்பதற்கு இது ஒரு சான்றாக உள்ளது என்றும் பாஜகவில் மட்டுமே இது சாத்தியமாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
பிரதமர் மோடி டீ கடை வைத்து தான் தற்போது பெரிய அளவில் புகழ் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்