டாஸ்மாக் கடைக்கு எதிராக போராடுவது பெருங்குற்றமா? நீதிபதி கேள்வி

வியாழன், 4 மே 2017 (18:13 IST)
டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராடும் மக்களை கைது செய்யக்கூடாது என நாளை உத்தரவு பிறப்பிக்க உள்ளதாக உயர் நீதிமன்ற நீதிபதி அறிவித்துள்ளார்.


 

 
நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டருக்குள் இருக்கும் டாஸ்மாக் கடைகளை அகற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி டாஸ்மாக் கடைகள் அகற்றப்பட்டது. இதனால் தமிழக அரசு வருவாய் ஈட்டும் டாஸ்மாக் கடைகளை மீண்டும் வேறு இடங்களில் திறக்க அரசு முடிவு செய்தது.
 
ஆனால் இதற்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் திருமுல்லைவாயில் பகுதியில் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராடியவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களை விடுவிக்கக் கொரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
 
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், டாஸ்மாக் கடையின் விளம்ப்ர பலகையை கழிப்பது பெருங்குற்றமா? என கேள்வி எழுப்பினார். அதோடு டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராடும் மக்களை கைது செய்யக்கூடாது என்ற உத்தரவை நாளை பிறப்பிக்க உள்ளதாக நீதிபதி அறிவித்துள்ளார்.
 
மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட காவல்துறை ஆய்வாளரை நாளை ஆஜராக உத்தரவிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்