அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா தலைமையிலான அரசு மீண்டும் பொறுப்பேற்றவுடன் முதல் கையெழுத்தே பூரண மதுவிலக்கை வலியுறுத்தி படிபடியாக மதுவிலக்கை அமல் படுத்துவது என்றும், அதற்காக இரண்டு மணி நேரம் மதுவிற்பனையை குறைத்தும், தற்போது இன்று முதல் தமிழகத்தில் 500 கடைகளையும், கரூரில் 14 கடைகளையும் மூட சொல்லி உத்திரவிட்ட நிலையில், கரூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவரும், அ.தி.மு.க நிர்வாகியுமான திரு.வி.க விற்கு சொந்தமான கடையானது, 24 மணி நேரமும் இயங்கி வருவது வேதனைக்குரியது என்று கூறுகிறார்கள் அந்த பகுதி மக்கள்.
அ.தி.மு.க நிர்வாகிகளே, மேலும் பொதுமக்களுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தும் இது போன்ற கடைகளை உடனே மூட வேண்டுமென்றும், நிருபர்களை செய்தி சேகரிக்க சென்ற சம்பவத்தில் நிருபர்கள் மற்றும் ஒளிப்படக்காரர்களை கடுமையான வார்த்தைகளால் திட்டியதும், சட்டவிரோத மதுவிற்பனை கும்பல் மீது பொதுமக்களும், தன்னார்வலர்களும், நடுநிலையாளர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.