மேலும் அவருக்கு உறுதுணையாக இருந்த பெற்றோருக்கும், ஊக்குவித்த ஆசிரியர்களுக்கும் என் பாராட்டுகள். அகில இந்திய அளவில் தொடர்ந்து இரண்டாவது வருடமாக தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் முதலிடம் பெற்று சி. ஏ இறுதித் தேர்வில் வெற்றி பெறுவது மாநிலத்திற்கு கிடைத்த இரட்டிப்பு மகிழ்ச்சியாகவே கருதுகிறேன். கடந்த வருடம் இந்த தேர்வில் முதலிடம் பிடித்து தமிழக மாணவர் ஜான் பிரிட்டோ சாதனை புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பல்வேறு தேர்வுகளிலும் அகில இந்திய அளவில் தமிழக மாணவர்கள் இப்படி அடுத்தடுத்து அரிய சாதனைகள் புரிய வேண்டும் என்று வாழ்த்துகிறேன். அகில இந்திய குடிமைப் பணிகளுக்கான தேர்வு பயிற்சி மையத்தை தமிழக அரசு சென்னை அண்ணா நகரில் வைத்திருப்பது போல், சிஏ படிப்பிற்கும் மாநில அரசு ஒரு புதிய பயிற்சி மையத்தை துவங்கி மாணவர்கள் சிஏ படிப்பில் மேலும் ஆர்வமாக சேருவதற்கு ஆக்கமும் ஊக்கமும் அளிக்க முன் வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.