தமிழகத்தை பதம் பார்த்த கனமழை! – இன்று எங்கெங்கு பள்ளிகள் விடுமுறை?

திங்கள், 15 நவம்பர் 2021 (10:30 IST)
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக இன்றும் சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பல மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது. இதனால் பல இடங்களில் நீர்நிலைகள் முழுவதுமாக நிரம்பியதுடன் பல இடங்களில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது. கன்னியாக்குமரியில் பெய்த கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று கன்னியாக்குமரி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மழை வெள்ள நிவாரண முகாம்களாக செயல்பட்டு வரும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்