இந்நிலையில் சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தின் அடுத்த நான்கு நாட்களுக்கு கோவை நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் மழை பெய்யும். குமரி கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி நிலவுவதால் தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.