10,11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணை வெளியீடு

செவ்வாய், 12 ஜூன் 2018 (14:45 IST)
பள்ளிக்கல்வித்துரை அமைச்சர் செங்கோட்டையன் 2018-19ம் கல்வி ஆண்டுக்கான 10,11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான கால அட்டவணையை வெளியிட்டார்.
 
கோடை விடுமுறை முடிந்து கடந்த ஜூன் 1ம் தேதி தமிழகத்தில் உள்ள பள்ளிகள் திறக்கப்பட்டது. அப்போது 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தப்படும் தேதிகள் வெளியிடப்படும் என கூறப்பட்டது.
இந்நிலையில், இன்று 2018-19ம் கல்வி ஆண்டுக்கான 10,11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான கால அட்டவணையை வெளியிடப்பட்டுள்ளது. இதில் 10-ம் வகுப்புக்கான தேர்வு மார்ச் 14 முதல் 29 வரையில் நடத்தப்படும் என்றும், 11-ம் வகுப்புக்கான தேர்வு மார்ச் 6 முதல் 22 வரையிலும், 12-ம் வகுப்புகளுக்கு மார்ச் 1-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்