இலங்கைக்கு அடுத்த கட்டமாக உதவி பொருட்கள்! – தமிழக அரசு திட்டம்!

வியாழன், 9 ஜூன் 2022 (14:53 IST)
இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் இரண்டாவது கட்டமாக உதவிப் பொருட்கள் அனுப்ப தமிழ்நாடு திட்டமிட்டுள்ளது.

இலங்கையில் கடந்த சில மாதங்கள் முன்னதாக கடும் பொருளாதார நெருக்கடி எழுந்த நிலையில் மக்கள் போராட்டம் வெடித்தது. இதனால் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே பதவியை ராஜினாமா செய்துவிட்டு தலைமறைவானார். அதை தொடர்ந்து ரனில் விக்ரமசிங்கே பிரதமராக பதவி ஏற்றுள்ளார்.

இலங்கை மக்கள் உணவுப் பொருட்களுக்கு திண்டாடும் நிலை ஏற்பட்டபோது தமிழக அரசு மத்திய அரசிடம் அனுமதி பெற்று இலங்கைக்கு உணவு பொருட்கள் உள்ளிட்டவற்றை அனுப்பி வைத்தது. இதற்காக மக்கள் பலரும் முதல்வர் நிதியில் பணம் அளித்தனர். இந்நிலையில் இலங்கையில் விரைவில் உணவு பஞ்சம் ஏற்படும் என ஐ.நா கணித்துள்ளது.

இதனால் இலங்கைக்கு இரண்டாவது கட்டமாக உணவு பொருள் அனுப்ப திட்டமிட்டு வருவதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார். இந்த உதவிப்பொருட்கள் தூத்துக்குடி துறைமுகம் வழியாக அனுப்ப திட்டமிட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்