சிறைக்கைதிகளுடன் வழக்கறிஞர்கள் செல்போனில் பேச அனுமதி… நீதிமன்றம் அரசுக்கு கேள்வி!

செவ்வாய், 15 ஜூன் 2021 (12:54 IST)
சிறையில் இருக்கும் கைதிகளோடு வழக்கறிஞர்ச்கள் செல்போன் அல்லது வீடியோ கால் மூலமாக பேச அனுமதி வழங்கவேண்டும் என வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் கே.ஆர்.ராஜா என்பவர் தொடுத்த வழக்கில் வழக்கறிஞர்கள் கைதிகளுடன் செல்போன் மூலமாக பேச அனுமதிக்க வேண்டும் எனக் கூறியிருந்தார். இதையேற்ற நீதிபதிகள் வழக்கு விசாரணையின் போது இது சம்மந்தமாக தமிழக அரசும் சிறைத்துறை நிர்வாகமும் பதிலளிக்கவேண்டும் என சொல்லி வழக்கை ஜூலை 1 ஆம் தேதி தள்ளி வைத்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்