தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த சில மாதங்களில் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் பெரும் பின்னடைவை சந்தித்துள்ள நிலையில், புதிய நிறுவனங்கள் உருவாவதிலும் பிரச்சினைகள் எழுந்துள்ளன.
இந்நிலையில் சிறு, குறு தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக தளர்வுகள் மற்றும் சலுகைகள் கொண்ட அரசாணயை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி அரசு டெண்டர்களில் பங்கு கொள்ள சிறு, குறு நிறுவனங்களுக்கு முன் அனுபவம் தேவையில்லை. ஸ்டார்ட் அப் முகமையில் பதிவு செய்திருந்தாலே போதுமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.