இந்தியாவை உலுக்கும் கரும்பூஞ்சை தொற்று; மூன்றாவது இடத்தில் தமிழகம்?

வெள்ளி, 23 ஜூலை 2021 (09:49 IST)
இந்தியா முழுவதும் கரும்பூஞ்சை தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் மாநிலங்களில் தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையை கட்டுக்குள் கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் முயற்சித்து வரும் நிலையில், மற்றொரு புறம் கரும்பூஞ்சை தொற்று பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

இதுகுறித்து மத்திய இணை மந்திரி பாரதி ப்ரவீன் பவார் எழுதியுள்ள கடிதம் ஒன்றில் மகாராஷ்டிரத்தில் கரும்பூஞ்சை தொற்றால் இதுவரை 1,129 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் இதுவரை மொத்தமாக 2,813 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதாகவும், அதில் மகாராஷ்டிராவிற்கு அடுத்து குஜராத் (656) இரண்டாவது இடத்திலும், தமிழகம் (334) மூன்றாவது இடத்திலும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்