ஆனால் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விற்கு 9,45,006 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் தேர்ச்சி முடிவுகள் 9,39,829 பேருக்கு மட்டுமே வந்துள்ளதும், மீதமுள்ள 5,177பேரின் தேர்ச்சி குறித்த தகவல்கள் இல்லாததாலும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. அதில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பதிவு செய்த மாணவர்கள் எண்ணிக்கை 9,45,077. இதில் 231 மாணவர்கள் பதிவு செய்தபின் இயற்கை எய்தியுள்ளனர். 658 பேர் மாற்றுச்சான்றிதழ் பெற்று படிப்பை நிறுத்தியுள்ளனர். 4,359 பேர் பள்ளிகளில் நடந்த காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் ஒரு பாடங்களை கூட எழுதவில்லை. இந்த காரணங்களால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தமாக 5,248 பேரை தவிர்த்து 9,39,829 பேருக்கு தேர்ச்சி அளிக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.