10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்; 100% ஆல் பாஸ்! – கொண்டாடத்தில் மாணவர்கள்!

திங்கள், 10 ஆகஸ்ட் 2020 (09:49 IST)
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகளால் 10ம் வகுப்பு தேர்வுகள் நடக்காத சூழலில் அரசு அறிவித்தபடி அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்புகளால் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் அனைத்து மாணவர்களுக்கும்  தேர்வின்றி தேர்ச்சி அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. அதன்படி இன்று தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. அரசு அறிவித்தபடியே அனைத்து மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளதால் தேர்ச்சி விகிதம் 100% ஆக உள்ளது. 10ம் வக்குபு தேர்ச்சி விகிதம் 100% அடைந்துள்ளது தமிழக வரலாற்றில் இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, ஆகிய தளங்களில் தெரிந்து கொள்ளலாம். மதிப்பெண் சார்ந்த குறைகள் இருந்தால் ஆகஸ்டு 17 முதல் 25 வரை பள்ளி தலைமையாசியர் வாயிலாக விண்ணப்பிக்கலாம், தற்காலிக மதிப்பெண் சான்றுகளை ஆகஸ்டு 17 முதல் 25 வரை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்