லஞ்சப் புகாரில் தமிழக தலைமை கணக்காளர் கைது; சி.பி.ஐ அதிரடி

சனி, 24 மார்ச் 2018 (08:11 IST)
பணி நியமனத்துக்கு ரூ.5 லட்சம் வரை லஞ்சம் வாங்கியதாக கூறப்பட்ட புகாரில் தமிழ்நாடு மாநில தலைமை கணக்காளரை சி.பி.ஐ. போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தமிழ்நாடு மாநில கணக்காளர் அலுவலகத்தில் ராஜஸ்தானைச் சேர்ந்த அருண் கோயல் என்பவர் மாநில தலைமை கணக்காளராக பதவி வகித்து வந்தார்.  சுமார் 80-க்கும் மேற்பட்ட அதிகாரிகளை நியமனம் செய்ததில் முறைகேடு நடந்ததாகவும், இவர் ஒவ்வொருவரிடமும் தலா ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை லஞ்சம் பெற்றுக்கொண்டு பணி நியமன ஆணையை வழங்கியதாகவும் புகார் எழுந்தது. 
 
இந்நிலையில் திருவண்ணாமலையை சேர்ந்த நபர் ஒருவருக்கு பணி வழங்க அருண் கோயல், 5 லட்சம் லஞ்சம் வாங்கும் போது சி.பி.ஐ அதிகாரிகள் அவரை சுற்றி வளைத்தனர். 
 
இதனையடுத்து மாநில தலைமை கணக்காளர் அருண் கோயல், அவருக்கு உதவிய கஜேந்திரன், சிவலிங்கம், எல்.எஸ்.ராஜா ஆகிய நால்வரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்