அடுத்த மாதம் முதல் பேருந்துகள் இயங்க வாய்ப்பு?! – இ-பாஸ் முறை ரத்தா?

ஞாயிறு, 30 ஆகஸ்ட் 2020 (09:24 IST)
நாடு முழுவதும் கொரோனா தளர்வுகள் மெல்ல மெல்ல அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் அடுத்த மாதத்திற்கான தளர்வுகள் குறித்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகளால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் மாதம் தோறும் புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. மத்திய அரசு அறிவிக்கும் தளர்வுகளை பொறுத்து மாநில அரசுகள் ஊரடங்கில் கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகின்றன.

கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் பேருந்து வசதிகளும் நிறுத்தப்பட்டுள்ளன, இதனால் மக்கள் பலர் அதிகமான இன்னல்களுக்கு உள்ளாகியுள்ளதால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் செப்டம்பர் 7 முதல் நாடு முழுவதும் மெட்ரோ ரயில்களை இயக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் செப்டம்பர் 1ம் தேதி முதல் தமிழகத்தில் பேருந்து வசதிகள் தொடங்கப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அவ்வாறாக பேருந்து வசதிகள் தொடங்கப்பட்டால் தற்போதுள்ள இ-பாஸ் முறைக்கு அவசியம் இருக்காது எனவும் பேசிக்கொள்ளப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்