தேர்தல் முடிவுக்கு பின் திமுகவுக்கு செல்ல தமிழிசை முடிவா?

வியாழன், 16 மே 2019 (09:37 IST)
காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து கொண்டே, ராகுல் காந்தி பிரதமர் என்று கூறிக்கொண்டே மூன்றாவது அணிக்காகவும், பாஜகவிடமும் திமுக  தலைவர் முக ஸ்டாலின் பேசி வருவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன்  ஒரு பகீர் குற்றச்சாட்டை முன்வைத்தார். 
 
இந்த குற்றச்சாட்டுக்கு முக ஸ்டாலின் உள்பட திமுகவினர் பதிலடி கொடுத்துள்ள நிலையில் தற்போது தேர்தல் முடிவுக்கு பின் தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து தமிழிசை நீக்கப்படுவார் என்றும், அதன்பின்னர் அவர் காங்கிரஸ் அல்லது திமுகவில் இணைய திட்டமிட்டிருப்பதாகவும் நேற்று தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றில் திமுக சார்பில் பேசிய மனுஷ்யபுத்திரன் கூறியுள்ளார். மேலும் இதற்கு தன்னிடம் ஆதாரம் இருப்பதாகவும், இந்த ஆதாரங்களை தக்க நேரத்தில் வெளியிட தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்
 
தமிழிசையின் தந்தை குமரி ஆனந்தன் பழம்பெரும் காங்கிரஸ் தலைவர் என்பதால் அவரது தாய்க்கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு செல்வார் என்று ஏற்கனவே அரசியல் வட்டாரங்கள் கூறி வரும் நிலையில் தற்போது திமுக தரப்பும் அதனை உறுதிசெய்துள்ளது. இது உண்மையா என்பதை தேர்தல் முடிவுக்கு பின் பொறுத்திருந்து பார்ப்போம்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்