மத்திய அரசு நிர்வாக வசதிக்காக அமைச்சரவை விரிவாக்கம் செய்துள்ளது. அதன்படி மத்திய அமைச்சகத்தில் புதிய துறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், புதிய அமைச்சர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகனுக்கு 3 துறைகளில் மத்திய இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இதில் குறிப்பாக குறிப்பாக தமிழகத்திலிருந்து மத்திய அமைச்சராக பதவியேற்றுள்ள அருமைச் சகோதரர் எல்.முருகன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். தங்கள் பணி இந்திய நாட்டிற்கும், தமிழ் மக்களின் வாழ்வு சிறக்க எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.