மத்திய அமைச்சரான எல்.முருகன்; போன் செய்து வாழ்த்திய மு.க.ஸ்டாலின்!

வியாழன், 8 ஜூலை 2021 (12:01 IST)
மத்திய இணை அமைச்சராக தமிழகத்தை சேர்ந்த எல்.முருகன் பதவியேற்றுள்ளதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு நிர்வாக வசதிக்காக அமைச்சரவை விரிவாக்கம் செய்துள்ளது. அதன்படி மத்திய அமைச்சகத்தில் புதிய துறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், புதிய அமைச்சர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகனுக்கு 3 துறைகளில் மத்திய இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

மத்திய இணை அமைச்சராக பதவியேற்றுள்ள எல்.முருகனுக்கு பல அரசியல் கட்சிகளும் வாழ்த்து தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் எல்.முருகனுக்கு தொலைபேசி வாயிலாக அழைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். மத்திய – மாநில அரசுகளிடையே பாலமாக செயல்படுவேன் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்