இது பாஜகவினர் மத்தியில் பெரும் சர்ச்சையாக வெடித்தது. அதற்கு முக்கிய காரணமே கட்சியின் தலைமை அறிவிக்கும் முன்பே ஹெச்.ராஜா வேட்பாளர்களை அறிவித்துவிட்டது தான். அதற்கு பிறகு தான் பாஜக தலைமை நேற்று (மார்ச் 21) முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. அதில் பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் மீண்டும் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டது.
தமிழகத்தில் ஆளுங்கட்சி அதிமுக கூட்டணியில் பாஜக.வுக்கு ஒதுக்கப்பட்ட 5 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், ஹெச்.ராஜா அறிவித்திருந்த அதே 5 வேட்பாளர்களும் அதிகாரபூர்வ பட்டியலில் இடம் பெற்றனர். இதனால் தமிழிசை எச் ராஜா மீது கடும் கோபத்தில் இருந்து வருகிறார்.
சமீபத்தில் இதைப்பற்றி பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய தமிழிசை, தமிழகத்தில் பாஜக தலைவர் நானா இல்லை அவரா, நானும் மற்ற தலைவர்களும் அவர் அறிவிக்கும் வேட்பாளர்களின் பட்டியலை கேட்கவேண்டுமா என காட்டமாக கூறியுள்ளார்.