இதுகுறித்து தமிழிசை தனது டுவிட்டரில் 'தற்சமயம் முதல் என்னுடைய டுவிட்டர் கணக்கு மக்கள் பாதுகாவலர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் ( Chowkidar Dr Tamilisai Soundararajan ) என்று இயங்கும் என குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே பிரதமர் நரேந்திரமோடி, அமித்ஷா மற்றும் மத்திய அமைச்சர்களின் டுவிட்டர் கணக்குகளில் அவர்களது பெயருக்கு முன் Chowkidar என்ற வார்த்தை சேர்க்கப்பட்டுள்ள நிலையில் அதை பின்பற்றி தமிழிசை அவர்களும் தனது டுவிட்டர் கணக்கின் பெயரை மாற்றியுள்ளார்.