அதில் என்னை பொருத்தவரை எனக்கு இரண்டு மாநிலங்களில் கவர்னர் பதவி கொடுத்துள்ளனர், அந்த பதவியை நான் தகுந்த முறையில் செய்து வருகிறேன். கவர்னர் பதவியில் இருக்கும் போதே என்னால் பல மக்கள் சேவைகளை செய்ய முடிகிறது என்றால், எம்பி போன்ற பதவியில் இருந்தால் இன்னும் அதிகமாக செய்ய முடியும் என்று நான் நினைக்கிறேன்.
ஆனால் அதே நேரத்தில் தலைமை என்ன சொல்கிறதோ, அதைத்தான் நான் கேட்பேன். போட்டியிடுங்கள் என்றால் போட்டியிடுவேன், அல்லது கவர்னராக தொடருங்கள் என்றாலும் தொடர்வேன். இதுவரை எனக்கு கிடைத்த பதவிகள் எதுவுமே நான் கேட்டு கிடைத்தது கிடையாது, தானாகவே என்னுடைய திறமையை பார்த்து வழங்கப்பட்டது. அதேபோல் என்னை போட்டியிட தலைமை ஆணையிட்டால் போட்டியிடுவேன் என்று கூறியுள்ளார்.