சுப்ரமணியன் சுவாமி சசிகலாவுக்கு ஆதரவாக பேசியதற்கு, அவர் எப்போதாவது இப்படிப் பேசினால் பரவாயில்லை, எப்பவுமே இப்படித்தான் என்றால் என்ன செய்வது என்று தமிழிசை கூறியுள்ளார்.
இதுகுறித்து பேட்டியளித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறியதாவது:-
சுப்பிரமணியன் சுவாமி இப்படிப் பேசி இருப்பது வருத்தமளிக்கிறது. தமிழக பாஜக பன்னீர்செல்வம்தான் முதல்வராக மீண்டும் வரவேண்டும் என்கிற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறது. சசிகலாவுக்கு பதவி ஆசை ஏற்படாமல் இருந்திருந்தால், பன்னீர்செல்வமே முதல்வராக நீடித்திருந்திருப்பார். இப்படிப்பட்ட சுழல் உருவாகி இருக்காது.