தவெக ஆண்டு விழாவில் செய்தியாளர் தாக்கப்பட்டாரா? பவுன்சர் மீது குற்றச்சாட்டு..!

Mahendran

புதன், 26 பிப்ரவரி 2025 (11:06 IST)
தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு விழா இன்று நடைபெற்று வரும் நிலையில், செய்தியாளர் ஒருவர் தாக்கப்பட்டதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
விஜய்யின் தமிழக வெற்றி கழகம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட நிலையில், தற்போது இந்த கட்சியின் இரண்டாம் ஆண்டு விழா மகாபலிபுரம் அருகே பூஞ்சேரி என்ற பகுதியில் நடைபெற்று வருகிறது.
 
விழா மேடையில் விஜய், பிரசாந்த் கிஷோர் உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.  மேலும் இன்று விஜய் "கெட் அவுட்" என்ற கையெழுத்து இயக்கத்தையும் தொடங்கி வைத்தார்.
 
இந்த விழாவில் கலந்து கொள்ள 2000 பேருக்கு மட்டுமே பாஸ் வழங்கப்பட்ட நிலையில், 3000 பேர் வரை அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பாஸ் இல்லாத சிலர் இன்னும் நுழைவு வாயிலில் காத்திருக்கிறார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
 
இந்த நிலையில், விழாவை பற்றிய செய்தி சேகரிக்க, செய்தியாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டதாகவும், வீடியோ மற்றும் புகைப்படக்காரர்கள் அனுமதிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
 
இந்த நிலையில், பவுன்சர் ஒருவர் செய்தியாளரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அந்த செய்தியாளர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதனால் விழா நடைபெறும் அரங்கத்தின் வெளியே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்