இதனிடையே, அணைக்கு ஒப்புதல் கேட்டு கர்நாடக முதலைச்சர் எடியூரப்பா எழுதிய கடிதத்துக்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மறுப்பு தெரிவித்துவிட்டார். இதனைத்தொடர்ந்து டெல்லியில் தமிழக நீர்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர செகாவத்தை சந்தித்துப் பேசுகிறார்.
இந்த சந்திப்பின் போது மேகதாது அணைக்கு அனுமதி வழங்கக்கூடாது என்ற கருத்தை அவர் வலியுறுத்த உள்ளார். தென்பெண்ணையாற்றின் கிளை நதியான மார்கண்டேய நதியில் கர்நாடகம் அணை கட்டியது குறித்தும் ஆலோசிக்க உள்ளார். மேலும், முல்லைப்பெரியாறு அணை விவகாரம் குறித்தும் மத்திய அமைச்சருடன் விவாதிப்பார் என தெரிகிறது.