தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

Mahendran

செவ்வாய், 18 மார்ச் 2025 (13:40 IST)
தமிழகத்தின் சில பகுதிகளில் அடுத்த ஏழு நாட்களுக்கு லேசான மழை முதல் மிதமான மழை வரை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
இன்று முதல், அதாவது மார்ச் 18 முதல் அடுத்த ஏழு நாட்களுக்கு, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில், தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் வறண்ட வானிலை தான் காணப்படும் என்றும், அடுத்த மூன்று நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்றும் மாநில ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
இப்போதே சென்னை உள்பட பல பகுதிகளில் வெயில் கொளுத்தி வருகிறது. பல மாவட்டங்களில் 100 டிகிரி செல்சியஸை தாண்டி வெப்பம் பதிவாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
ஒருசில இடங்களில் மட்டும் லேசானது முதல் மிதமான மழை பெய்தாலும், தமிழகம் முழுவதும் இன்னும் சில நாட்களுக்கு வெயில் கொளுத்தும் என்றும், இந்த ஆண்டு மிக அதிகமாக வெப்பம் பதிவாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
எனவே, வெப்பத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள, குறிப்பாக முதியோர்கள் மற்றும் சிறுவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்