அவர்களை நிற்க சொல்லி ராணுவத்தினர் தடுத்தபோது அவர்கள் துப்பாக்கியால் ராணுவத்தினரை நோக்கி சுடத் தொடங்கியுள்ளனர். இதனால் ராணுவம் நடத்திய பதில் தாக்குதலில் இருவரும் உயிரிழந்தனர்.. இந்த துப்பாக்கிச்சூடு சண்டையில் 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாகவும், இரு ராணுவ வீரர்கள் காயமடைந்ததாகவும் தகவல் வெளியானது.
ராணுவ வீரர் லட்சுமணின் உடலுக்கு அமைச்சர் பிடியார். பழனிவேல், மாவட்ட ஆட்சியயர் அனீஸ்சேகர் உள்ளீட்ட பலரும் அவரது உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதைத்தொடர்ந்து லட்சுமணன் உடல் ஊர்வலகாக கொண்டு செல்லப்பட்டு, இறுதி மரியாதை செலுத்தப்பட்டது,குடும்பத்தினர், உறவினர்கள், அஞ்சலி செலுத்திய பின் 21 குண்டுகள் முழங்க ராணுவ வீரர்கள் மரியாதை செலுத்திய பின் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.